ஸ்ரீதேவி மகள்கள் ஸ்ரீதேவி ஜெராக்ஸாக ஜொலிக்கும் மகள்கள்... பாவாடை தாவணியில் அசத்தல் புகைப்படங்கள்

****
By -
0

 ஸ்ரீதேவி மகள்கள் ஸ்ரீதேவி ஜெராக்ஸாக ஜொலிக்கும் மகள்கள்... பாவாடை தாவணியில் அசத்தல் புகைப்படங்கள்








மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள்களான ஜான்வி மற்றும் குஷி ஆகிய இருவரும் தமிழ் பாரம்பரிய உடையான பாவாடை தாவனியில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழகத்தின் தென் மாவட்டங்களில் பிறந்து இந்திய சினிமாவில் கொடிகட்டி பறந்தவர் நடிகை ஸ்ரீதேவி. கமல் ரஜினிகாந்த் உள்ளிட்ட தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் தொடங்கிய இந்தி சினிமாவிலும் தனக்கென தனி இடத்தை பெற்றிருந்த ஸ்ரீதேவி, தயாரிப்பாளர் போனி கபூரை திருமணம் செய்துகொண்டார். இவருக்கு ஜான்வி மற்றும் குஷி ஆகிய இரு மகள்கள் உள்ளனர்.

கடந்த சில வருடங்களுக்கு முன்பு உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்காக தூபாய் சென்றிருந்த நடிகை ஸ்ரீதேவி, அங்கேயே மரணமடைந்தார். இதனிடையே இந்தி சினிமாவில் அறிமுகமான ஸ்ரீதேவி நடித்து வரும் ஜான்வி கபூர் விரைவில் தமிழ் சினிமாவில் அறிமுகமாவார் என்று கூறப்படும் நிலையில், ஸ்ரீதேவியின் கணவர் அஜித்தின் வலிமை, துணிவு உள்ளிட்ட படங்களை தயாரித்திருந்தார்.

ஸ்ரீதேவி இல்லை என்றாலும், அவ்வப்போது அவரது மகள்கள் ஸ்ரீதேவியின் சென்னை வீட்டில் இருந்து புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர். மேலும் இந்த வீட்டில் இருப்பது நான் ஸ்ரீதேவியுடன் இருப்பது போல் உணர்வதாக போனி கபூரும் தெரிவித்திருந்தார். இந்நிலையில், ஸ்ரீதேவியின் மகள்கள் ஜான்வி மற்றும் குஷி இருவரும் பாவாடை தாவணியில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், இருவருமே மறைந்த நடிகை ஸ்ரீதேவியை நினைவுபடுத்துவதாக உள்ளது என்று பலரும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Post a Comment

0Comments

Post a Comment (0)